கோதாவின் குடியுரிமை சர்ச்சை : வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் சட்டரீதியில் தீர்வு!

261 0

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் கிடையாது. தற்போது குடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள  சர்ச்சைகள் அனைத்திற்கும் வேட்புமனு தாக்கலுக்கு முன்னர் சட்டரீதியில் தீர்வை பெற்றுக் கொள்வோம்  என பாராளுமன்ற உறுப்பினர்  சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்  பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்து  நீக்குவதற்கு தற்பேர்து ஆளும் தரப்பினரால் பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள்  சொலிஷ்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க  தற்போது அரசியல் அழுத்தங்களின் காரணமாகவே  பொய்யான  வழக்குகளை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நீதியமைச்சின் முன்னாள் செயலாளர் சுஹத கம்லத் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரத்ன,  மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் அனுர குமார திஸாநாயக்க ஆகியோர்  கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு  அழுத்தம் பிரயோகித்தார்கள்  என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்களுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளை எதிரணி விரைவில் முன்னெடுக்கும் என அவர் தெரிவித்தார.