சீன தேசிய தினம்: ஹாங்காங்கில் வன்முறை

362 0

ஹாங்காங்கில் சீன தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

70 ஆண்டுகளுக்கு முன்னால், 1949-ல் மா சே துங் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை நிறுவினார். இன்றும் சீனா உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக வளர்ந்திருக்கிறது. வர்த்தகம், பாதுகாப்பு, அறிவியல், விளையாட்டுத் துறை என பலவற்றில் உலக நாடுகள் பிறவற்றுக்குச் சவால் விடும் நிலையில் சீனா முன்னேறி வருகிறது.

சீனாவில் 70 -வது தேசிய தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) வாண வேடிக்கைகளுடன் கொண்டாடப்படுகிறது.

தேசிய தினத்தையொட்டி பெய்ஜிங்கின் புகழ்பெற்ற தியானன்மென் சதுக்கத்தில் நடைபெறும் கொண்டாட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்ற இருக்கிறார்.

 

இந்நிலையில் சீன தேசிய தினம், நிர்வாக இயக்குநர் கேரி லேம் தலைமையில் ஹாங்காங்கில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ராணுவ அணிவகுப்பு நடந்து முடிந்தவுடன் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மோதலை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.