பாராசூட் செயலிழந்ததால் உயிரிழந்த சுற்றுலா பயணி

403 0

20,000 அடி உயரத்தில் இருந்து குதித்தபோது பாராசூட் செயலிழந்ததால் கனடாவை சேர்ந்த ஜஸ்டின் கைலோ என்ற சுற்றுலா பயணி உயிரிழந்தார்.கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாதளங்களில் ஒன்று கிளிமாஞ்சாரோ மலை. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 20,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மிக உயரமான மலை இது. இங்கு “பாராகிளைடிங்” மற்றும் “வைல்ட் லைப் சபாரி” ஆகிய சாகச பயணங்கள் மிகவும் பிரபலமானவை.

இந்த நிலையில், கனடாவை சேர்ந்த ஜஸ்டின் கைலோ (வயது 51) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளிமாஞ்சாரோ மலையில் ஏறி சிகரத்தை அடைந்தார். அதன் பின்னர் கடந்த சனிக்கிழமை அவர் “பாராகிளைடிங்” மூலம் மலையில் இருந்து கீழே இறங்க முடிவு செய்தார்.

அதன்படி அவர் பாராசூட் உதவியோடு மலையில் இருந்து குதித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அவரது பாராசூட் விரியாமல் போனது. இதனால் அவர் சுமார் 20,000 அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். தான்சானியா தேசிய பூங்காவின் அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.