இங்கிலாந்தில் வெள்ளம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

284 0

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து ஊடகங்கள், “வடக்கு இங்கிலாந்து கடுமையான மழைப்பொழிவைச் சந்தித்துள்ளது. நாட்டின் பல இடங்களில் 70 மி.மீ. வரை மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுமார் 61 இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோன்வால், டிவாம், சோமர்செட், சஸ்செஸ் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் தகவல் தொழில்நுட்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெள்ளப் பாதிப்பு குறித்து இங்கிலாந்து போலீஸார் கூறும்போது, “சாலையில் தேங்கியுள்ள வெள்ளத்தை நீக்கப் பணிகள் தீவரமாக நடந்து வருகின்றன. மேலும் சாலையில் வாகனத்தை ஓட்டி வருபவர்களுக்கு விபத்து ஏற்படுத்தாத வண்ணம் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் வரும் நாட்களில் அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்படும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழைக்கு இடையே உலக சாம்பியன்ஷிப் சைக்கிளிங் போட்டிகள் மாற்றுப் பாதையில் நடத்தப்பட்டன.