இந்திய விமானப்படை தளபதியாக பதாரியா பொறுப்பேற்பு!

185 0

இந்திய விமானப்படையின் தளபதி தனோவா இன்று ஓய்வு பெறுவதையொட்டி புதிய தளபதியாக ராகேஷ் குமார் சிங் பதாரியா பதவியேற்றார்.

ராகேஷ் குமார் சிங் பதாரியா 1980-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 2017-ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை  விமானப்படை பிரிவின் கட்டளை தளபதியாக பணியாற்றினார். 36 ஆண்டு கால சேவையில் சேனா பதக்கம் உள்ளிட்ட ஏராளமான  விருதுகளை பெற்றுள்ளார். இந்த ஆண்டு விமானப்படையின் துணை தளபதியாக நியமிக்கப்பட்டார்.
ரபேல் போர் விமானங்களை இந்திய  விமானப்படையில் இணைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார். கடந்த 19ம் தேதி இந்திய விமானப்படையின் அடுத்த தளபதியாக பதாரியா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்திய விமானப்படையின் தளபதி தனோவா இன்று ஓய்வு பெறுவதையொட்டி, ராகேஷ் சிங் பதாரியா புதிய தளபதியாக  பொறுப்பேற்றுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய பதாரியா, ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு கூடுதல் வலிமை சேர்க்கும். ரபேல் போர் விமானங்கள்  மூலம் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என்றார். பதாரியா இந்திய விமானப்படையின்  26-வது தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.