வவுனியா நகரப் பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட பெண் ஒருவரின் கைப் பையில் இருந்து பணத்தை திருடிய பெண் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வவுனியா பழைய பஸ் நிலையம் பகுதிக்கு வந்த பஸ் ஒன்றிலிருந்து தாயும், மகனும் இறங்க முற்பட்ட வேளை, குறித்த பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட பெண்ணின் கைப்பையை திறந்து அதில் இருந்த பணத்தை திருடியுள்ளார்.
இதனையடுத்து குறித்த தாயும், மகனும் அப் பெண்ணை துரத்திச் சென்ற போது அவர் அவசர அவசரமாக சென்று முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பியோட முயன்றுள்ளார்.
இதனையடுத்து அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இதன்போது அவ்விடத்தில் பொது மக்கள், பொலிசார் வந்ததையடுத்து குறித்த பெண் திருடியதாக கூறப்பட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு மன்னிப்பு கோரினார். இதன்பின் எச்சரிக்கப்பட்டு குறித்த பெண் விடுவிக்கப்பட்டார்.

