சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மதகுருவின் பூதவுடைலை தகனம் செய்வதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் நீதிமன்ற செயற்பாடுகளை புறக்கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றிற்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

