அமெரிக்காவில் 23-ந்தேதி இம்ரான்கான்-டிரம்ப் சந்திப்பு

203 0

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, இம்ரான்கான் வருகிற 23-ந்தேதி நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்புவார் என தெரிகிறது.74-வது ஐ.நா. பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 24-ந்தேதி முதல், 30-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா செல்கிறார்.

இந்த பயணத்தின் போது, வருகிற 23-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, இம்ரான்கான் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்புவார் என தெரிகிறது.