பூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு

264 0

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தான் கட்டாய விடுமுறையில் அனுப்பட்டமை சட்டத்துக்கு முரணானது எனவும்,  அதன் ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் குறித்த உத்தரவை இரத்து செய்யுமாறும் தன்னை பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக இடைக்கால தடை ஒன்றினை பிறப்பிக்குமாறும் கோரியே பொலிஸ் மா அதிபர் இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகியோரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.