பான் கீ மூன் இலங்கை வருகிறார்?

7924 185

newPic_8316_jpg_2078811gஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இந்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா மாநாட்டில் வைத்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பான் கீ மூனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைத்துள்ளதாகவும், அவர் இந்த வருட இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் தாமதப்படுத்தும் நுட்பத்தை கையாண்டு தட்டிக்கழிப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.

பொறுப்புக்கூறுதல் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

மறுசீரமைப்பு என்பது ஓரே இரவில் எட்டக்கூடிய விடயம் இல்லை.

இதற்கு கடும் உழைப்பும், அதிக அக்கறையும் தொடர்ச்சியான செயற்பாடுகளும் தேவைப்படுகின்றன.

இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment