பலாலி விமான நிலையத்திற்கு அமைச்சர் அர்ஜூன திடீர் விஜயம்

309 0

பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பலாலி விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் நிர்மாணப்பணிகள் நூற்றுக்கு 70 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும், அதே போன்று விமாநிலையம் மற்றும் விமான சேவைகள் வழங்கும் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் நிர்மாணப்பணிகள் 55 வீதமும் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந் நிர்மாணப்பணிகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இன்று பலாலி விமான நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் பலாவி விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. எ

எனவே ஒக்டோபர் 10 ஆம் திகதிக்கு முன்னர் நிர்மாணப்பணிகள் நிறைவடையச் செய்வதற்கு சிவில் விமான சேவைகள் அமைச்சினால் நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிர்மாணப்பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை பரிசீலிப்பதற்காகவே அமைச்சர் இந்த திடீர் விஜயத்தினை மேற்கொண்டதாக போக்குவரத்து அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அத்தோடு இந்த திடீர் விஜயத்தில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளோ அல்லது விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் வழங்கும் நிறுவனத்தின் அதிகாரிகளோ இன்றி அமைச்சரின் தனிப்பட்ட விஜயமாக அமைந்திருந்தமை விஷேட அம்சமாகும் என்றும் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.