ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவி சஜித் பிரேதமாஸவிற்கு வழங்கப்பட்டாலும் அவருக்கு வெற்றிபெற பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி யாரை களமிறக்கினாலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை திசை திருப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

