இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவை மேலும் பலப்படுத்த வேண்டும்-ராஜித

234 0
இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவை மேலும் பலப்படுத்த வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இலங்கை – இந்திய நாடுகளின் நட்பு ரீதியான கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், இன்றைக்கு 2500 ஆண்டகளுக்கு முன்னர் விஜய குமார அரசனின் வருகையோடு இலங்கை இந்திய உறவு ஆரம்பித்தாக கூறினார்.

ஆகவே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துவதன் மூலம் இலங்கையில் பௌத்த மதத்தைப் மேலும் வலுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

அதனுடன் பின்னி பிணைந்த கலாச்சாரம், கலை மற்றும் கலை நுட்பங்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்தாகவும் அமைச்சர் கூறினார்.

முன்னர் தென்னிந்திய அரசர்கள் யுத்தத்தில் பாதிப்புகளை எதிர்கொண்ட போது இலங்கையின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டதாகவும் வரலாறுகளில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் இலங்கை அரசர்களும் யுத்தத்தின் போது இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.

பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல் இல்கை இந்தியாவுடன் நெருங்கிய உறவை கடைப்பிடிப்பதாக தெரிவித்த அவர், குறிப்பாக இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்ட மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோருடன் அப்போது டீ.எஸ்.சேனாநாயக்க சுமுகமான உறவை பேணியதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் அரசியல் கட்சிகள் உருவாக பேராசிரியர் கொல்வின் ஆர்.சில்வாவும் பங்களிப்பு வழங்கியதாக தெரிவித்த அமைச்சர் எனவே முன்பு போன்றே தற்பாதும் இலங்கையுடனான இந்தியாவின் நெருங்கிய உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அமைப்பையும் அமைச்சர் பாராட்டினார்.