ரணில்- கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூடி நாளை மறுதினம் இறுதித் தீர்மானமாம்

38 0

ஜனாதிபதி தேர்தலில் தம்மை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் ஆதரவை கோரும் வகையில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளை நாளை இரவு சந்திக்கின்றார்.

அத்துடன் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர்.

சஜித் தரப்பு மற்றும் ரணில் தரப்பு பேச்சுவார்த்தையாக இது நடைபெறவுள்ளதுடன் இன்றைய சந்திப்பின் தீர்மானங்களுக்கு அமைய நாளை மறுதினம்  பிரதான சந்திப்பில் வேட்பாளர் விடயம் மற்றும் கூட்டணிக்கான இறுதி நடவடிக்கைகள் ஆகிய பிரதான இரண்டு விடயங்களுக்கும் இறுதித் தீர்மானம் எ