21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களை ஐ.எஸ். ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகள் முன்னெடுத்ததாக சித்திரிக்க, விஷேட வலையமைப்பொன்றூடாக நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக கூறப்படும் தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் விவகார விசாரணைகளின் போது சந்தேக நபர் தொடர்பில் தகவல் வெளிபப்டுத்தப்பட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர் இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதன்போதே அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தர்விட்டார்.

