நல்­ல­வரா, கெட்­ட­வரா? – முகாபே ஒரு சகாப்தம்

46 0

‘நாயகன் படத்தில் ஒரு காட்சி. வேலு­நா­யக்கர் என்ற கதா­பாத்­திரம்.  அவ­ரிடம் சிறு­வ­யது மகள் கேட்பாள்’ அப்பா, நீங்க நல்­ல­வரா, கெட்­ட­வரா?’ அதற்கு வேலு நாயக்கர் பதில் அளிப்பார் ‘தெரி­ய­லையே அம்மா!’

சிம்­பாப்­வேயின் நீண்­ட நாள் ஜனா­தி­பதி ரொபர்ட் முகா­பேயும் அதே மாதிரி தான்.

மக்­களின் நேசத்­தையும், வெறுப்­பையும் சம்­பா­தித்த தலைவர். ரொபர்ட் முகாபே சிறந்த தலை­வரா, மோச­மா­ன­வரா என்று சிம்­பாப்வே மக்­களைக் கேட்டால், தெரி­ய­லையே என்று தான் பதில் கூறு­வார்கள்.

கால­ணித்­துவ ஆட்­சியின் அடிமைத் தளை­களில் இருந்து தமது தேசத்­திற்கு விடு­தலை தேடித்­தந்த தைரி­ய­மா­ன­தொரு தலைவன்.

அந்தத் தலைவன், தனது 95 வயதில் இறுதி மூச்சை விட்­ட­போது, அவர் எங்கே இருந்தார் என்­பது கூட நாட்டு மக்­க­ளுக்குத் தெரி­ய­வில்லை.

மகாத்மா காந்தி, நெல்சன் மண்­டேலா போன்ற சகாப்­தங்­க­ளுடன் ரொபர்ட் முகா­பேயை ஒப்­பிட முடி­யாமல் இருந்­த­மைக்கு பல கார­ணங்கள்.

ஒரு ஆசி­ரி­ய­ராக வாழ்க்கையைத் தொடங்கி, சிம்­பாப்­வேயின் சுதந்­திரப் போராட்­டத்தை வழி­ந­டத்­திய தலைவர். ஆட்­சி ­பீ­டத்தில்  அமர்ந்து சர்ச்­சைக்­கு­ரிய காணிக் கொள்­கையை அமு­லாக்­கிய ஆட்­சி­யாளர். தமக்கு எதி­ரான மாற்­றுக்­க­ருத்­துக்­களை இரும்­புக்­கரம் கொண்டு அடக்­கிய எதேச்­சா­தி­காரி. தமது இளம் மனை­வியின் ஆடம்­ப­ரங்­களால் அதி­கா­ரத்­தையும் செல்­வாக்­கையும் இழந்த ஆண்­மகன்.ரொபர்ட் முகா­பேயின் வாழ்க்கை, மற்­ற­வர்­க­ளுக்கு பாட­மாக இருக்க வேண்­டி­ய­தொன்று. அது நல்ல விட­யங்­க­ளுக்­காக மட்­டு­மல்ல. அவர் விட்ட தவ­று­க­ளுக்­கா­கவும் தான்.

ஆபி­ரிக்­கர்கள் என்றால் இளக்­கா­ரமா? கறுப்­பர்கள் என்றால் தொடர்ந்தும் சிறு­மைப்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்க வேண்­டுமா என்று கலகக் குரல் எழுப்பி, ஒட்­டு­ மொத்த ஆபி­ரிக்க மண்­ணிலும் விடு­தலை உணர்வை ஏற்­ப­டுத்­திய தலைவர். தாம் விடு­தலைப் போரை வழி­ ந­டத்­தி­யவர் என்­ப­தற்­காக, தமது தேசத்தைக் கடைசி வரை ஆளும் தார்­மீக உரிமை தனக்கே உண்­டெனக் கரு­திய பிடி­வா­தமும் அவரைச் சார்ந்­தது.

கடவுள் வா என்று அழைக்கும் வரையில் நான் ஆட்­சி­பீ­டத்தில் அமர்ந்­தி­ருப்பேன் என ஆபி­ரிக்க ஒன்­றி­யத்தின் பொது மேடையில் தயக்கம் இன்றி உரைத்த எதேச்­சா­தி­காரி.

1924ஆம் ஆண்டு பெப்­ர­வரி 21ஆம் திகதி வெள்­ளை­யர்கள் கறுப்­பின விவ­சா­யி­க­ளுக்­காக ஒதுக்­கி­ய­தொரு பிர­தே­சத்தில் ரொபர்ட் முகாபே பிறந்தார். மந்­தை­களை மேய்ப்­பது குலத்­தொழில். மாடு­க­ளுடன் கழ­னிக்கு செல்­கையில் கையில் புத்­தகம் இருக்கும். தமது பத்து வயதில் தந்தை விட்டுச் சென்று விட, தாயின் உணர்வுச் சுழல்­களில் சிக்கி வாழ்க்­கையை இழந்து விட­வில்லை. மாறாக, நம்­பிக்­கை­யுடன் கிறிஸ்­தவ மிஷ­னரி கல்­லூ­ரி­களை நாடினார்.  படித்து பட்டம் பெற்றார்.

நெல்சன் மண்­டே­லாவின் அர­சியல் சிந்­த­னைகள் அவரைக் கவர்ந்­தன. இந்­தி­யாவின் சுதந்­தி­ரத்­திற்கு வித்­திட்ட மகாத்மா காந்­தி­யையும், ஜவ­ஹர்லால் நேரு­வையும் உதா­ர­ணங்­க­ளாகக் கரு­தினார்.எனினும், தெளிந்­த­தொரு அர­சியல் சிந்­தனை முகா­பே­யிற்கு இருக்­க­வில்லை. மார்­சி­ஸ-­ லெ­னி­னிஸம் அவரை ஈர்த்­தது. ஒரு கட்­டத்தில் ஆபி­ரிக்க சோஷ­லிசக் கொள்­கை­களை ஆத­ரித்தார்.

வெள்­ளை­யின கொடுங்­கோ­லாட்சி உச்சம் பெற்­றி­ருந்த வேளையில், அவ­ரது அர­சியல் வாழ்க்கை ஆரம்­பமா­னது.

புகழ்­பெற்ற ஸானு கட்­சியைத் தொடங்கி அர­சியல் செய்ய ஆரம்பித்த சம­யத்தில் வெள்­ளை­யின ஆட்­சி­யா­ளர்­களால் சிறை­பி­டிக்கப்பட்டார். சிறை­வாசம் அனு­ப­வித்த சமயம் தமது ஒரே குழந்தை இறந்த­போது, இறுதிக் கிரி­யை­களில் கலந்து கொள்ள ஆட்­சி­யா­ளர்கள் அனு­ ம­திக்­க­வில்லை. அப்­போது பிறந்த கோபத்தின் கனல் முகாபே என்ற அறி­வா­ளியின் உள்­ளத்தில் சுதந்­திரத் தீயை மூட்டி விட்­டது எனலாம்.

சிறையில் இருந்து விடு­தலை பெற்ற பின்னர், ஆபி­ரிக்க தேசிய கொரில்லா இயக்­கத்தை வழி­ந­டத்தி, வெள்­ளை­யின ஆட்சியாளர்களுக்கு எதி­ராக போராட்டம் நடத்­தினார்.

1980ஆம் ஆண்டு முகா­பேயின் ஸானு-­பீஎவ் கட்சி சுதந்­திர சிம்பாப்­வேயின் முத­லா­வது தேர்­தலில் அமோக வெற்­றி­யீட்­டி­யது. அவர் தேசத்தின் முதல் பிர­த­ம­ரானார்.

பின்னர், 1987இல் அர­சியல் யாப்பில் திருத்­தங்­களை சேர்த்து, நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக மாறினார்.

சிம்­பாப்­வேயின் ஆட்­சியைக் கைப்­பற்­றி­யதும், தமது அர­சியல் பகை­யா­ளியைக் கொன்று குவித்­தமை பற்றி முகாபே மீது தீவிர விமர்­ச­னங்கள் உள்­ளன.

தாம் சுதந்­திரப் போராட்­டத்தை முன்­னெ­டுத்த காலத்தில் தமது அர­சியல் பகை­யா­ளி­யாக இருந்த ஜோஷூவா என்­கோமோ என்­பவர் தமக்கு எதி­ராக கிளர்ச்­சியைத் தொடங்­கி­ய­போது, ரொபர்ட் முகாபே இரும்­புக்­கரம் கொண்டு அடக்­கினார். வட­கொ­ரி­யாவில் பயிற்சி பெற்ற துருப்­புக்­களைக் கொண்டு அர­சியல் பகை­யா­ளி­களை ஒழித்துக் கட்­டினார்.

இந்த ஒடுக்­கு­மு­றையில் முகா­பேயின் படைகள் பொது­மக்கள் மத்­தியில் இருந்தும் 20,000 பேரைக் கொன்று குவித்­த­தாக விமர்­ச­னங்கள் உள்­ளன.

எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் தமது ஆட்சி பீடத்­திற்கு சவால் விடுக்­கப்­ப­டு­வதை முகாபே சகித்துக் கொள்­வ ­தில்லை. மோர்கன் த்ஸ்வாங்­கிராய் என்ற அர­சி­யல்­வாதி ஜன­நா­யக மாற்­றத்­திற்­கான இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்­கி­ய­போது, முகாபே சந்­தேகக் கண் கொண்டு பார்த்தார்.

இந்த இயக்கம் சிம்­பாப்­வேயில் சிறு­பான்­மை­யி­ன­ராக இருந்து கொண்டு பெரு­ம­ளவு நிலத்தை தமது கையப்­ப­டுத்­தி­யி­ருக்கும் வெள்­ளைக்­கா­ரர்­களின் பணத்தில் இயங்­கு­கி­றது என்று அவர் நம்­பினார்.

வெள்­ளைக்­கா­ரர்­க­ளிடம் இருந்து காணி­களைப் பறித்து கறுப்­பின மக்கள் மத்­தியில் விநி­யோ­கிக்கும் திட்­டத்தைத் தொடங்­கினார்.

இதற்­காக நிலங்கள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டன. நில உட­மை­யா­ளர்கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டார்கள். நில அப­க­ரிப்பு வன்­மு­றை­க­ளுக்கு வித்­திட்­டது. பலர் உயி­ரி­ழக்க நேரிட்­டது. இது தவிர, வெள்­ளைக்­கா­ரர்கள் பயிர் செய்த காணியில் கறுப்­பி­னத்­த­வர்கள் கமத்­தொழில் செய்­வதில் முட்­டுக்­கட்­டைகள் ஏற்­பட்­டன. போதிய பச­ளையோ, நீர்ப்­பா­சன வச­தி­களோ, தேவை­யான  பணமோ இருக்­க­வில்லை. பலர் கமத் தொ­ழிலைக் கைவிட்­டார்கள்.

விவ­சாயம் வீழ்ச்சி கண்­டது. பொருளா­தாரம் பெரிதும் பாதிக்­கப்­பட்­டது.  நிலைமை மோச­மா­னது. மேற்­கு­லக சமூகம் உதவி செய்ய முன்­வந்­த­போது, நாம் வெள்­ளைக்­கா­ரர்­க­ளிடம் கையேந்­து­வதா என்று முகாபே இறு­மாப்புப் பேசினார்.

உத­வி­களை மறுத்தார். ஒத்­து­ழைக்­கவும் இல்லை. தீர்க்­க­மா­ன­தொரு பொரு­ளா­தாரத் திட்­ட­மின்றி, அர­சியல் நோக்­கத்­திற்­காக காணி­களை மீளப்­பெறும் திட்டம் சிம்­பாப்வே தேசத்தை பொரு­ளா­தார சிக்­க­லுக்குள் தள்­ளி­யது.

இந்த நிலைமை தேர்தல் களத்­திலும் பிர­தி­ப­லிக்கத் தவ­ற­வில்லை.

2008ஆம் ஆண்டில் ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெற்­ற­போது, முதற்­சுற்று வாக்­கெ­டுப்பில் முகாபே தோல்­வி­யுற்றார். முகா­பேயின் தள­ப­திகள் திடீர் மூலோ­பா­யத்தை வகுத்து, தேர்­தலில் வெற்றி பெற்ற மோர்கன் த்ஸ்வாங்­கி­ராயின் விசு­வா­சி­களைத் தாக்­கி­னார்கள்.

இந்த வன்­மு­றையில் 200 பேர் வரை கொல்­லப்­பட்­டார்கள். இரண்­டா­வது சுற்று தேர்தல் நடந்­தது. முகா­பேயின் வெற்­றியை த்ஸ்வாங்­கி­ராயின் தரப்பு அங்­கீ­க­ரிக்­க­வில்லை. அவர் வேறு கட்­சி­யுடன் கூட்­டணி அமைத்து நாற்­கா­லியைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஒரு கட்­டத்தில், எதேச்­சா­தி­காரி என்ற தோற்­றத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்து, தாம் நல்­லவர் என்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்த வேண்­டிய தேவை முகா­பே­யிற்கு ஏற்­பட்­டது. இதற்­காக பல திட்­டங்­களை வகுத்தார். ஊட­கங்­க­ளுடன் நட்­பு­ற­வானார்.

இந்த முயற்­சி­களில் முகா­பே­யிற்கு உறு­து­ணை­யாக இருந்­தவர், கிரேஸ் முகாபே. ஒரு காலத்தில் முகா­பேயின்  காரி­ய­த­ரி­சி­யாக இருந்­தவர். அவ­ரது முத­லா­வது மனைவி மறைந்­த­பொ­ழுது, அந்த இடத்தைப் பிடித்துக் கொண்­டவர். தமது வாழ்க்­கையில் தமக்கு நெருக்­க­மாக இருக்கும் பெண்­மணி கிரேஸ் தானென பொது இடங்­களில் முகாபே பகி­ரங்­க­மாகக் கூறினார்.

ஒரு கட்­டத்தில் கிரேஸின் செல்­வாக்கு அதி­க­ரித்­தது. அவர் தம்மை முக்­கி­யத்­துவம் மிக்­க­வ­ராக சித்­த­ரித்துக் காட்­டினார். முகா­பேயின் கட்­சிக்குள் புகழ்­பெற்­ற­வ­ராக பரி­ண­மித்துக் கொண்­டி­ருந்த பெண்ணை துணை ஜனா­தி­பதி பத­வியில் இருந்து நீக்­கு­வ­தற்கு சதி செய்தார். இந்தப் பெண், குட்டைப் பாவாடை அணிந்தார் என்­பதும், முகா­பேயைக் கொல்ல சதி செய்தார் என்­பதும் அவர் மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள். இவை சோடிக்­கப்­பட்­டவை என்­பதை அனை­வரும் அறிந்­தி­ருந்­தார்கள்.

தமது தள்­ளாத வயதில் மீண்டும் தேர்­தலில் போட்­டி­யிட்­ட­போது, முகாபே வெற்றி பெற்­றி­ருந்தார். அந்த வெற்றி குறித்து பல விமர்­ச­னங்கள் இருந்­த­போதும், சிம்­பாப்வே மக்­க­ளுக்கு தமது சுதந்­திரப் போராட்ட வீரன் மீதி­ருந்த நம்­பிக்கை குறை­ய­வில்லை.

இருந்­த­போ­திலும், இந்த முதி­ய­வரை பக­டைக்­கா­யாக வைத்துக் கொண்டு, கிரேஸ் ஆட்­சியைக் கைப்­பற்ற முனை­கி­றோரோ என்ற சந்­தேகம் எழுந்­த­போது தான், முகா­பே­யிற்கு எதி­ரான அலை தீவிரம் பெற்­றது.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முகா­பேயின் இரா­ணு­வமே அவ­ருக்கு எதி­ராக சதிப்­பு­ரட்சி செய்து, முகா­பேயின் அர­சியல் சீட­ராகக் கரு­தப்­படும் எமர்சன் ம்நான்­காவா என்­ப­வரை ஆட்­சி­பீ­டத்தில்  அமர்த்தியது.

இதே நிலை­மையில் வேறொ­ரு­வ­ராக இருந்­தி­ருந்தால், முகாபே சிறையில் அடைக்கப்பட்டிருக் கலாம். அல்லது கொலை செய்யப் பட்டிருக்கலாம்.

ஆனால், சவால்களை அஞ்சாமல் வெற்றி கொண்ட தைரியமான தலைவர், தமது காணிகளை வெள்ளைக்காரர்களிடம் இருந்து மீட்டுத் தந்தவர் என்ற எண்ணம் சிம்பாப்வே மக்கள் மத்தியில் இருந்ததால், பதவி கவிழ்க்கப்பட்ட பின்னரும் ஹராரேயிலுள்ள சொகுசு மாளிகையில் தமது மனைவியுடன் சந்தோஷமாக வாழும் வாய்ப்பு அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டது.

கடைசிக் காலத்தில் முகாபேயிற்கு என்ன நோய் ஏற்பட்டது, அவர் எங்கே சிகிச்சை பெற்றார் என்ற விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. அவரை மக்கள் நல்லவராக போற்றினார்களா, தீயவராக தூற்றினார்களா என்பதும் தெரியவில்லை. மேற்குலக ஊடகங்கள் வாயிலாக நாம் பார்க்கும் முகாபே, வில்லத்தனம் மிக்கவராகத் தெரிந்தாலும், அவரொரு சகாப்தமாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்பது திண்ணம்.

– சதீஸ் கிருஷ்ணபிள்ளை –