ரத்கம, கந்துரெஸ்ஸ பகுதியில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சட்ட விரோத துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நேற்று இரவு குற்றச் செயல் ஒன்றில் ஈடுபட தயாராக இருந்த நிலையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூஸ்ஸ, கந்துருபே பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் பல்வேறு கொள்ளை சம்பவங்கள் மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.
ரத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

