பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட சிறப்பு விசேட ரயில் பெட்டியில் பயணம் மேற்கொண்ட 11 ஆண்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் பின்னர் எச்சரிக்கையுடன் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் இவ்வாறான சோதனைகள் ரயில்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெண்களுக்கான தனிப்பெட்டிகள் ஒதுக்கப்பட்ட ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

