சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினாலே கேள்விக் குறியாக்கப்பட்ட சர்வஜன வாக்குரிமை!

300 0

சாதாரண முறையில் தேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்பதற்காக ஸ்தாபித்த சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவினாலே இன்று சர்வஜன  வாக்குரிமை கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

அத்துடன் மாகாண சபை தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இருந்து பாராளுமன்றத்தில் பலவீனம் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு சுதந்திரமான முறையில் தமக்காக ஜனாதிபதியை நாட்டு மக்கள் தெரிவு செய்கின்றார்கள். ஆனால் ஜனாதிபதியினால் பயன்பெறுவது அமெரிக்காவா அல்லது சீனாவா  என்ற போட்டித்தன்மை தற்போது ஏற்பட்டுள்ளது.  அந்தளவிற்கு சர்வதேசத்தில் தலையீடுகள் நாட்டுக்குள் பரந்தளவில் காணப்படுகின்றது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.