கூட்டணி விவகாரம் வெற்றிப்பெற வேண்டும் என்பதே எமது நோக்கம் – செஹான்

383 0

கூட்டணி விவகாரம் வெற்றிப்பெற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மீண்டும் இணையுமாக இருந்தால் கட்சியை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணிப்பார்கள்.

2020ஆம் ஆண்டு யார் தலைமையிலான அரசாங்கம் தேவை என்பதை நாட்டு மக்கள் உள்ளுராட்சிமன்ற தேர்தலின் பெறுபேற்றின் ஊடாக தெளிவுப்படுத்தி விட்டார்கள்.

சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் பலமான கூட்டணியமைத்தலுக்கு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகின்றது. கூட்டணி விவகாரம் வெற்றிப் பெற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

சுதந்திர கட்சியையும், அதன் கொள்கைகளையும் எதிரணியினல் இல்லாது செய்ய முயற்சிக்கின்றார்கள் என்று அரசியல் பிரச்சாரம் செய்கின்றார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.