மா ஓயாவில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்பு

32 0

அலவ்வ பாலத்திற்கு அருகில் மா ஓயாவில் இருந்து இருவரின் சடலங்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

ஒரு சடலம் பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய சடலம் பாலத்தில் இருந்து 400 மீற்றர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

30 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க இவரின் சடலங்களே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர்களின் அடையாளம் மற்றும் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பில் வரகாப்பொல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.