சிலி நாட்டில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

295 0

சிலி நாட்டில் நேற்றிரவு 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிலி நாட்டின் ஆரிகா நகரில் இருந்து 72 கி.மீ. தொலைவில் நேற்றிரவு 9.32 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.