மூன்றாம் தவ­ணைக்­கான கல்வி நட­வ­டிக்­கைகள் இன்று ஆரம்பம்!

332 0

நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள பாட­சா­லை­களில் மூன்றாம் தவணை கல்வி நட­வ­டிக்­கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

கடந்த மாதம் 2 ஆம் திகதி இரண்டாம் தவ­ணைக்­கான விடு­முறை வழங்­கப்­பட்­டி­ருந்தது.  ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் கல்விப் பொது­த்த­ரா­தர உயர்­தர பரீட்­சைகள் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­த­தோடு புலமைப் பரிசில் பரீட்­சையும் இடம்­பெற்­றது.

இந்­நி­லையில் உயர்­தர பரீட்­சைக்­கான  விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­தோடு, விடைத்தாள் திருத்தும் மத்­திய நிலை­யங்­க­ளாகக் காணப்­படும் பாட­சா­லை­களின் மூன்றாம் தவணை கல்வி நட­வ­டிக்­கைகள் தாமதமாகவே ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.