கேரள கஞ்சா வைத்திருந்த நபர் கைது

369 0

கேரள கஞ்சா தொகை ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் இரத்தினபுரி, கொலுவாவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹவத்த பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 3 கிலோகிராம் கேரள கஞ்சா தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாணைகளுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.