மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் பலி!

340 0

சிகிரிய பகுதியில் உள்ள இனாமலுவ இராணுவ முகாம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய ஊவா பரணமக பகுதியைச் சேர்ந்த அசங்க உதயகுமார என்பவர் ஆவார்.

மின்சாரம் தாக்கப்பட்டமையடுத்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே இவர் உயிரிழந்துள்ளார்.