முதல்வரின் அணுகுமுறையால் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது- செங்கோட்டையன்

223 0

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முதல்வர் பழனிசாமி ரூ.3 லட்சத்து 431 கோடியை தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரியின் பொன் விழா நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசர் காலத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன அதுபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு புதிய சரித்திரம் படைத்திருக்கிறார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். 60 ஆண்டுகால கனவு திட்டமான அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ரூ.34 ஆயிரத்து 700 கோடி ஒதுக்கிய அரசு இந்தியாவிலேயே தமிழகம்தான்.

பில்கேட்ஸ் ஒருமுறை கூறும்போது பிறக்கும் போது ஏழையாக பிறப்பது தவறு இல்லை. ஆனால் இறக்கும் போது ஏழையாக இறப்பது தவறு என்றார். உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.3 லட்சத்து 431 கோடியை தமிழகத்திற்கு முதல்வர் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் கருப்பணன் கூறியதாவது:-

குடிமராமத்து திட்டம் உலக மக்களால் போற்றப்படும் மகத்தான திட்டம் ஆகும். இந்த திட்டம் மூலம் பல்வேறு இடங்களில் மாயமாக இருந்த குளம் குட்டைகள் மீண்டும் விட்டு எடுக்கப்பட்டுள்ளன.

நமது முதல்வர் இந்தியாவிலேயே எளிமையாக உள்ள முதல்வராக திகழ்கிறார். பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை நமது முதல்வர் தந்துள்ளார். முதல்வராக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலிதாவுக்கு பிறகு நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான திட்டங்கள். பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் திட்டம் திருமண உதவி தொகை கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் அன்பழகன் கூறியதாவது:-

தமிழகம் உயர் கல்வியில் சிறந்து விளங்குவதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை செயல் படுத்தினார். அவருடைய வழியில் ஆட்சி செய்து வரும் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். உயர்கல்வி படிப்பில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது இதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. மொத்தம் ஆயிரத்து 666 புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவிகள் கல்லூரி தேர்வில் வெற்றிபெற்று விடலாம் ஆனால் வாழ்க்கை தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.