நீதிக் கட்டமைப்பு பாதுகாக்கப்படும்-அத்துகோரள

200 0

சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத் அத்துகோரள தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத போதைப் பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். சட்டவிரோதமான போதைப் பொருட்களை நாட்டிற்குக் கொண்டு வருவதை முற்றாக இல்லாமல் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சில அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள பின்னிற்கப் போவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் சமூக சேவையாளர்கள் 120 பேருக்கு சமாதான நீதவான் நியமனம் வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சமாதான நீதவான்களின் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டார்.