தமிழர் பிரதேசங்களில் இராணுவமயமாக்கல் அகற்றப்படும் – மங்கள சமரவீர

5600 23

mangalaவடக்கு மற்றும் கிழக்கில் அடுத்த வருடத்துக்கு முன்னர், இராணுவமயமாக்கல் நீக்கப்படும் என்று, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள அவர், அங்க பொதுஅமைப்புகளுடன் சந்திப்பு ஒன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆட்சி அமைத்த புதிய அரசாங்கம் பழைய ஆட்சியில் இருந்து முழுமையாக விடுபட்டு புதிய பாதையில் பயணிக்கிறது.

இந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் முன்னேற்றகரகமான செயற்பாடுகளுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

மேலும், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கு மேலும் கருத்துக்களை முன்வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment