றுகுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட றுகுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்களையுமே எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

