ஐக்கிய தேசியக் கட்சி மூன்று பிரிவுகளாக பிளவுப்படும்-லக்ஷமன்

401 0
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் நாட்களில் மூன்று பிரிவுகளாக பிளவுப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சஜித்தின் அணியாக ஒன்றும், பிரதமர் ரணிலின் அணியாக ஒன்றும், பொதுஜன பெரமுன கட்சியுடன் இணையும் பிரிவினர் என மூன்றாக பிளவடையும் எனவும் அவர் கூறினார்.

பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியால் இதுவரை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை கூட பெயரிட முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.