நாட்டின் பல இடங்களில் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் மட்டுமே உள்ளன – துரைராஜசிங்கம்

285 0

வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள் உள்ளபோதிலும் அந்த பகுதிகளில் தமிழர்கள் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு கிரான் ரெஜி மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்ந்த அடையாளங்கள், வழிப்பட்ட பிரசித்திப்பெற்ற ஆலயங்கள் உள்ளன. ஆனால் அந்த பகுதிகளில் தமிழர்கள் இல்லை.

வடக்கு கிழக்கில் சரியான தலைமைத்துவம் இருந்ததன் காரணமாகவே தமிழர்கள் தமிழர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மேலும் நாங்கள் கேட்கின்ற உரிமை என்பது வெறுமனே தமிழர்களுக்கான உரிமை அல்ல மனிதர்களுக்கான அடிப்படை உரிமை. எங்களுடைய உரிமைகள் இந்த நாட்டின் அரசியல் சாசன சட்டத்தில் பதிக்கப்பட வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.