சஜித்தை வரவேற்கும் நிகழ்வில் அர்ஜுனவுக்கு அழைப்பு இல்லை

471 0
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு இன்று பதுளையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு பதுறை வீல்ஸ் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

எவ்வாறாயினும் பதுளையில் நடைபெறும் கூட்டம் தொடர்பில் தனக்கு தெரியாது எனவும், அவ்வாறான நிகழ்வுக்கான அழைப்பிதழ் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை வெகு சீக்கிரத்தில் அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.