மக்கள் தமது ஆணையை மீண்டும் ரணிலுக்கு வழங்க வேண்டும் – அகிலவிராஜ்

232 0

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் போன்­ற­தொரு சிறந்த தலை­வரை இனி­யொ­ரு­போதும் உரு­வாக்க முடி­யாது. இதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரி­வித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் ­கா­ரி­ய­வசம், இவ்­வாறு சிறப்­பான தலை­மைத்­து­வத்தில் நாட்டைக் கொண்டு செல்ல மக்கள் மீண்டும் ஆணை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

 

குரு­ணாகல் மாவட்­டத்தின் விவ­சா­யி­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

குரு­ணாகல் மாவட்­டத்தின் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் கட்­ட­டங்கள் அமைத்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. ‘ அரு­கி­லுள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை ‘ வேலைத்­திட்டம் மூலம் பாட­சா­லைகள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ளன. 3 – 4 வரு­டங்­க­ளுக்கு இடையில் இவ்­வாறு பல வேலைத்­திட்­டங்­களை எம்மால் செய்ய முடிந்­துள்­ளது. ஆனால் இவற்­றுக்கு நாம் ஒரு போதும் பிர­சா­ரங்­களைச் செய்­ய­வில்லை. அதற்கு அதிக நிதி ஒதுக்­கீடு செய்­யவும் இல்லை.

இந்த வேலைத்­திட்­டங்­களை நாம் தொடர்ந்தும் முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு மக்கள் ஆத­ரவு வழங்க வேண்டும். அன்று அர­சி­யல்­வா­தி­களின் தேவைக்­கேற்ப அதி­பர்­களும் ஆசி­ரி­யர்­களும் நிய­மிக்­கப்­பட்­டார்கள். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆலோ­ச­னைக்­கேற்ப தற்­போது அந்த கலா­சாரம் மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு மாவட்ட அதிபர் மூலம் இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்­புக்கள் வழங்­கப்­பட்­டன. இவை அனைத்­துமே பிர­த­மரின் ஆலோ­ச­னைக்­க­மை­யவே முன்­னெ­டுக்­கப்­பட்­டன. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் போன்­ற­தொரு சிறந்த தலை­வரை இனி­யொ­ரு­போதும் உரு­வாக்க முடி­யாது. இதனை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பௌத்த ஆக­மத்தை தமது பொய் பிர­சா­ரங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்திக் கொள்ளும் தலை­வர்­க­ளுக்கு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. பிர­தமர் ரணில் ஒரு­போதும் இவ்­வாறு ஆட்­சியைக் கைப்­பற்ற முயற்­சிக்­க­வில்லை. அவர் அவ்­வாறு அதி­கா­ரத்தைக் கைப்­பற்ற நினைத்திருந்தால் 2015 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியாக இருந்திருப்பார். எனவே அவர் தொடர்ந்தும் இவ்வாறு சிறப்பான தலைமைத்துவத்தில் நாட்டைக் கொண்டு செல்ல மக்கள் மீண்டும் ஆணை வழங்க வேண்டும் என்றார்.