ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாட்டிற்கு கட்சி என்ற ரீதியில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் கலந்து கொள்ளப் போவதில்லை என கட்சியின் பொது செயலாளர் மஹிந்தானந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கட்சி என்ற ரீதியில் கலந்து கொள்ளவில்லை எனினும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இரு கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை வெற்றிபெற செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெற உள்ள மாநாட்டில் அனைவருடைய ஒத்துழைப்புடனும் ஒரு வேட்பாளரை தெரிவு செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

