சுகாதார அமைச்சில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து தெளிவு படுத்தியதாகவும்,உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி பகுதியை சேர்ந்த மக்களுக்காக நீர்கொழும்பு வைத்திய சாலையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.
மேலும் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன எமது சங்கத்தினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருப்பது தொடர்பில் தாம் அச்சம் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை,தொழிற்சங்க சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே தாம் சுகாதார அமைச்சின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி வருவதாகவும்,அது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

