ஆணமடுவ பகுதியில் கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஆணமடுவ பகுதியில் இன்று காலை 8 மணியளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் போது 37 வயதுடைய ரசிகா பிரியதர்ஷனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்ப பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட மோதலின் போது , கணவனால் கூரிய ஆயுதத்தில் தாக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். சந்தேக நபரான கணவன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடுவை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

