ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தை கைது

283 0

திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை நேற்று இரவு (02) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருக்கடலூர், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் சாராயம் குடித்து விட்டு ஒரு வயது குழந்தைக்கும், மனைவிக்கும் தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து, சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர் மது போதையுடன் ஒரு வயது குழந்தையை தாக்கியதாகவும் இவ்வாறு தினமும் மது போதையுடன் மனைவி பிள்ளைகளை சந்தேக நபர் தாக்குவதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குழந்தையும் மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.