ATM மூலம் பணத்தை திருடிய நபர் கைது

391 0

ஏ. டி எம். அட்டையினை களவாடி ஹட்டன் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் பணத்தை களவாடிய சந்தேக நபர் ஒருவரை ஹட்டன் பொலிஸார் இன்று (30) கைது செய்துள்ளனர்.

ஹட்டன் புருட்கில் தோட்ட பகுதியை சேர்ந்த 66 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் ஹட்டன் மற்றும் அவிஸ்ஸாவலை பகுதிகளில் அரச வங்கியில் ஏ.டி.எம் அட்டையினை பயன்படுத்தி 122,000 ரூபாய் பணத்தினை கொள்ளையடித்துள்ளதாகவும் பணத்தின் உரிமையாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்த முறைபாட்டுக்கு அமைய பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் ஹட்டன் நகர பகுதியில் வைத்து கைது செய்யபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர் நாளை (31) ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்த பட உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.