அத்துடன் அரசாங்கம் 7 நாட்களுக்குள் விலகிக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் மக்களை அணிதிரட்டி அரசாங்கத்துக்கு எதிராக நாடுதழுவிய ரீதியில் போராட்டத்தை மேற்கொள்ளவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் தெரிவிக்கிறார்.

ரத்தன தேரர் ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியலில் இருந்துகொண்டு அந்த கட்சிக்கு எதிராக இவ்வாறு செயற்படுவதற்கு வெட்கப்படவேண்டும். அவர் உண்மையாக செயற்படுபவராக இருந்தால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டே அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மேற்கொள்ளவேண்டும். அதனால் சிங்கள மக்கள் இதன் பின்னரும் இவரை நம்பி ஏமாறமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய ஐக்கிய முன்னணி கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.