கிழக்கு மாகாண முதலவருக்கு எதிரான மனு தள்ளுபடி

5399 41

hafees5கிழக்கு மாகாண முதலமைச்சர் அரசியல் சாசனத்தை மீறியதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
சம்பூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அனுமதியின்றி பிரவேசித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த உயர் கடற்படை அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் கிழக்குமாகாண முதலமைச்சர் நசீர் அகமட் அரசியல் அமைப்பை மீறியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a comment