குருநாகலில் வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

508 0

குருநாகல் நகரத்தில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி சஹாப்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச வாசிகள் மற்றும் குருநாகல் வைத்தியசாலையின் பணியாளர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.