உயர்தர பரீட்சை குறைந்த பட்ச வெட்டுப்புள்ளி வெளியீடு

344 0

2018 ஆம் ஆண்டு இடம் பெற்று முடிந்த கல்வி பொது தராதர   உயர்தர பரீட்சை  பெறுபேறுகளுக்கு அமைய 2018  மற்றும்  2019 ஆம்  ஆண்டுக்கு  பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை  இணைத்துக் கொள்வதற்கான குறைந்த பட்ச  வெட்டுப்புள்ளியினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

http://www.selection.ugc.ac.lk/ என்ற  இணையத்தளத்தில் பிரவேசித்து தாம் தெரிவு தகுதிப் பெற்றுள்ள பயிற்சி நெறி மற்றும் தெரிவு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழகம் உள்ளிட்ட தகவல்களை மாணவர்கள் விண்ணப்பதாரிகள் பெற்றுக் கொள்ள முடியும்

பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சாதாரண விதிமுறைகளுக்கு அமையவே இம்முறை  மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதற்கமைய இவ்வருடத்தில் மாத்திரம் 30 ஆயிரத்து 380 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த வருடத்தினை  காட்டிலும் இவ்வருடம்  645 மாணவர்கள் மேலதிகமாக   இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.