பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் கைக்குண்டுடன் ஜா-எல யில் கைது

385 0

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை வெடி குண்டுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைபின் போதே ஜா-எல – ஏகல பகுதியில் வைத்து நேற்று குறித்த சந்தேக நபரை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

சந்தேக நபர் சம்பவ தின்னதன்று முற்பகல் 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.சந்தேக நபரை சோதணையிட்ட போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை வெடி குண்டு மீட்கப்பட்டது.

மேலும் சந்தேக நபர் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புப்பட்டுள்ளமை பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜா-எல , கந்தானை , மாபாகே , வத்தளை , நீர்கொழும்பு , மாரவில மற்றும் மீனுவாங்கொட ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் சந்தேக நபர் தொடர்புப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது சந்தேக நபரை கைது செய்வதற்கு நீதிமன்றத்தினால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமை பொலிசாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

கொடுகொட பகுதியை சேர்ந்த 31 வயதுடைய குறித்த சந்தேக நபர் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.