ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் பலமான முறையில் முகம்கொடுப்பதற்கான தேசிய ஜனநாயக முன்னணி எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவிஸ்ஸாவெல்லயில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு புதிய கொள்கைகளுடன் கூடிய அரசியல் கட்சி, சிவில் அமைப்புக்கள் உட்பட ஏனை அத்தனை அமைப்புக்களையும் ஒன்றிணைத்து அமைக்கப்படும் இந்த பாரிய முன்னணியில், ஜனநாயகத்தை விரும்பும் எந்தவொரு கட்சியும் இணைந்து கொள்ள முடியும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய முன்னணியில் இணைந்து கொள்ளும் சகல கட்சிகளும் தமது தனித்துவங்களைப் பாதுகாத்துக் கொண்டு பொதுக் கொள்கையின் அடிப்படையில் புதிய கட்சியாக செயற்பட முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

