தமிழக மீனவர்கள் சுஸ்மா சுவராஜை சந்திக்கவுள்ளனர்.

8142 51

fishermenஇலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட தங்களுக்கு அனுமதி பெற்றுத் தருமாறு, தமிழக மீனவர்கள் மீண்டும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து கோரவுள்ளனர்.

இதன் நிமித்தம் நேற்றையதினம் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் குழு ஒன்று டெல்லி சென்றிருந்தது.

இந்த குழு இன்றையதினம் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து இந்த விடயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை கையளிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment