வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயம்

281 0

வவுனியா காமினி பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 8 மணியளவில் வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தின் வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்து சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

காமினி பாடசாலையிலிருந்து மன்னார் பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு உரித்துடைய வாகனத்துடன் குருமன்காட்டிலிருந்து வவுனியா நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற  23 வயதுடைய இளைஞனே விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதன் காரணமாக தூக்கி வீசப்பட்ட இளைஞன் படுகாயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.