உயர் பொலிஸ் அதிகாரிகள் 31 பேருக்கு இடமாற்றம்

353 0
உயர் பொலிஸ் அதிகாரிகள் 31 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனை கூறியுள்ளது.

அதன்படி பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 20 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் பதினொரு பேர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவையின் அவசியம் கருதி இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.