அதிகம் துள்ளினால் முழங்காலிடச் செய்வோம்-புத்திக பத்திரன

489 0

கோதுமை மாவின் விலையை நினைத்தபடி அதிகரித்து அதிகம் துள்ளினால், பால் மா நிறுவனங்களை முழங்காலிடச் செய்தது போன்று கோதுமை மா நிறுவனங்களையும் செய்துவிடுவோம் என கைத் தொழில் மற்றும் வர்த்தகத்துறை பதில் அமைச்சர் புத்திக பதிரன தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபரும் கூட விலையை அதிகரிக்க முடியாது எனக் கூறியிருக்கும் நிலையிலேயே கோதுமை மா நிறுவனங்கள் இரண்டும் கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

அதிக விலையில் கோதுமை மா விற்பனை செய்யப்படும் நிறுவனங்களை சுற்றிவளைத்து, கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தான் இன்று காலை நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிப்புச் செய்ததாகவும், இதனையடுத்து செயற்பட்ட அதிகாரிகள் 3 மணி நேரத்துக்கு 51 நிறுவனங்களை சுற்றிவளைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பி.எம்.ஐ.சி.எச். இல் இன்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.