எந்த கட்சியாக இருந்தாலும், நாடு குறித்து சிந்திக்கும் தலைவர் ஒருவரே அதிகாரத்துக்கு வரவேண்டும் என, ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், நாட்டின் இனம் மற்றும் மதம் குறித்து சிந்திக்கும் தலைவர் ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களுக்கு அரசியல் என்பது அருவருப்பான விடயமாக தற்போது மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மேலும், ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக மக்கள் மத்தியில் பரவி வரும் கருத்துகள் முற்றிலும் பொய்யானவை என்றும் திவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ கூறியுள்ளார்.

