நாட்டில் மீண்டும் சஹ்ரான் பயங்கரவாதிகள் உருவாகவே மாட்டார்கள்- ரோஹித

364 0

இந்த அரசாங்கத்தில் எவருக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுத்தாலும், எவர் பதவிகளை எடுத்தாலும் அரசாங்கத்தின் இறுதி நாள் நவம்பர் மாத கடைசியிலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் சி.பி.ஐ. யிற்காகவது செய்ய முடியாத சாதனையை செய்துள்ளது. இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணையைப் போன்று எப்.பி.ஐ.யிற்கும் செய்ய முடியாது. உலகிலுள்ள எந்தவொரு பொலிஸுக்கும் செய்ய முடியாததை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது.

நீதிமன்றத்துக்கு சென்றதும் கிடையாது, சாட்சிகள் பதிவு செய்து கொள்ளவும் இல்லை. சம்பந்தப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணை மேற்கொள்ளவும் இல்லை. ஆனால், குற்றமற்றவர் என நிரபராதியாக்கப்பட்டுள்ளார். இதுதான் எமது நாட்டின் சிறப்பம்சம்.

இந்த நாட்டில் மீண்டும் சஹ்ரான்கள் உருவாகவே மாட்டாது. ஏனெனில், உருவாக எந்தவித இடமும் இல்லையே. அவ்வளவுக்கு எமது பொலிஸாரின் நடவடிக்கை அமைந்துள்ளது.

நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த அரசாங்கத்தில் யார் அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொண்டாலும், எதுவரைக்கும் என்பது குறிக்கப்பட்டே உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.